HDFC வங்கி வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு – ஆன்லைன் வங்கி சேவைகள்!
Important Notice for HDFC Bank Customers - Online Banking Services!
HDFC வங்கியின் திட்டமிடப்பட்ட பராமரிப்பு பணிகள் காரணமாக ஆன்லைன் வங்கி சேவைகள் ஜூலை 18ம் தேதி 6 மணிநேரம் இயங்காது என அறிவிப்பு வெளியாகி உள்ளது. எனவே வாடிக்கையாளர்கள் பண பரிவர்த்தனை உள்ளிட்ட பணிகளை முன்கூட்டியே திட்டமிட்டு கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.
TN Job “Telegram Group” Join Now
Online Services:
நாடு முழுவதும் கொரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக கடந்த வருடம் முதலே ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலில் உள்ளது. இதனால் பல்வேறு துறைகளில் மிகப்பெரிய மாற்றங்கள் ஏற்பட்டு வருகிறது. Education முதல் Bank சேவைகள் அனைத்தும் ஆன்லைன் மயமாக மாரி உள்ளது. ரூபாய் நோட்டுகள் வாயிலாக கொரோனா பரவ வாய்ப்புள்ளது என தகவல்கள் வெளியானதாலும், பிறருடன் ஆன நேரடி தொடர்பை தடுக்கும் நோக்கிலும் பலர் ஆன்லைன் பண பரிவர்த்தனைகளுக்கு மாறி உள்ளனர். இதனால் வங்கிகளின் இணைய பக்கம் எப்பொழுதும் பிசியாகவே உள்ளது.
எனவே அவ்வப்போது தொழில்நுட்ப பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால் குறிப்பிட்ட நாட்களுக்கு ஒரு முறை பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவது வழக்கம். தற்போது இது தொடர்பாக HDFC வங்கி அதன் வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்டு உள்ளது. நாட்டின் மிகப் பெரிய தனியார் வங்கியான எச்.டி.எஃப்.சி வங்கி ஜூலை 18 அன்று காலை 12 மணி முதல் காலை 6 மணி வரை வங்கி மற்றும் Mobile Banking சேவைகள் மூடப்படும் என்று தெரிவித்துள்ளது. இந்த காலகட்டத்தில் செய்யப்படும் வங்கியின் திட்டமிடப்பட்ட பராமரிப்பு பணிகள் காரணமாக சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்படும்.
TN Job “Telegram Group” Join Now
இது குறித்து வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு மின்னஞ்சல்கள் மூலம் தெரிவித்துள்ளது. எனவே வாடிக்கையாளர்கள் மேற்குறிப்பிட்ட நாள் மற்றும் நேரத்தில் ஆன்லைன் பணபரிவர்தனைகளை மேற்கொள்ள இயலாது. இதனால் தங்களது பணிகளை முன்கூட்டியே திட்டமிட்டு செயல்படுமாறு வாடிக்கையாளர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்.



No comments